ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா முன்னிட்டு, விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது
August 29, 2022
0
ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா முன்னிட்டு, வருகின்ற 31.08.2022 ம்
தேதி முதல் 06.09.2022 ம் தேதி வரை மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய சரங்களிலும்
இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை
செய்து அதன் பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்க உள்ளனர். மேற்படி
ஊர்வலங்கள் அமைதியான முறையில் நடைபெற வேண்டி போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், இன்று 29.08.2022 ம் தேதி ஈரோடு நகரம், கோபி
மற்றும் சத்தி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் தலைமையில் உட்கோட்ட
அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் இணைந்து ஈரோடு நகரம், கோபி மற்றும் சத்தி நகர பகுதியில்
உள்ள விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் ஈரோடு பகுதியில் ஈரோடு டவுன் DSP ஆனந்தகுமார் அவர்கள் தலைமையில் நடந்த இந்த அணிவகுப்பில் இன்ஸ்பெக்டர்கள் தெய்வராணி (டவுன்), நிர்மலாதேவி (மகளிர்), சோமசுந்தரம் (தாலுகா), சண்முகம் (வீரப்பன்சத்திரம்), ராஜபிரபு (கருங்கல்பாளையம்) ஆகியோர் மற்றும் அந்தந்த காவல் நிலைய போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் கலந்து கொண்டனர். ஈரோடு அரசு மருத்துவமனை மேம்பாலம் பகுதியில் தொடங்கிய கொடி அணிவகுப்பு பன்னீர் செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, எல்லை மாரியம்மன் கோவில் வழியாக கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் நிறைவடைந்தது.
Tags