ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அந்தியூரில் 75 வது தொடர் பாதயாத்திரை நிறைவு விழா நடைபெற்றது. இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பிறகு பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார். அந்தியூர் வட்டார தலைவர் ஏ.எஸ்.நாகராஜா அவர்கள் தலைமையிலும், ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.வி.சரவணன் அவர்கள் முன்னிலையிலும் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் காமராஜர் நினைவு அறக்கட்டளையின் பொருளாளர் பி. உதயகுமார், அனைத்து வட்டார நகர தலைவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.