எழுமாத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் கலையரங்கில் 16.08.2022 செவ்வாய்க்கிழமையன்று போதை பொருள் பயன்பாடு மற்றும் அதன் விளைவு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சி. வடிவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கணினி துறையின் ஆசிரியர் ஏ.சங்கீதா அவர்கள் வரவேற்புரையாற்றினார். மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.
நிகழ்வில் மாணவர்களிடையே போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்க சிறப்பு அழைப்பாளர்களாக குழந்தைகள் மற்றும் மனநல மருத்துவர் டாக்டர். பாபு ரங்கராஜன் அவர்கள் மற்றும் டாக்டர். ஏ. கிருத்திகா ஆகியோர் மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளையும் அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.