திங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கொடியேற்றம் முடிந்தவுடன், பெருந்துறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்களிலுமிருந்து 2021- 2022 ஆம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன. பகுதி சுகாதார செவிலியரான திருமதி சாரதாம்பாள் அவர்களின் பணியை பாராட்டி "பெருந்துறை வட்டாரத்தின் நட்சத்திர மருத்துவ பணியாளர்" என்ற பட்டம் அளிக்கப்பட்டது. மேலும் தேசபக்தி பாடல்களுக்கு நடன குழுவினர் நடனம் ஆடிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவின் ஏற்பாடுகள் அனைத்தும் பெருந்துறை வட்டார மருத்துவ அலுவலரான டாக்டர். சவி ஆர்த்தி செய்திருந்தார். அவரை மருத்துவக் குழுவினரும் பொதுமக்களும் மனமார பாராட்டினர் .