ம.நீ.ம. செயலாளர் G.C. சிவக்குமார் தலைமையில் வருவாய் கோட்டச்சியராக (RDO) பொறுப்பேற்றுள்ள திவ்யபிரியதர்ஷினி அவர்களை சந்தித்து சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
August 17, 2022
0
ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் கோட்டத்திற்கு புதிய வருவாய் கோட்டச்சியராக (RDO) பொறுப்பேற்றுள்ள உயர்திரு. திவ்யபிரியதர்ஷினி அவர்களை இன்று (17-08-22) புதன்கிழமை ஈரோடு வடகிழக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யத்தின் செயலாளர் G.C.சிவக்குமார் தலைமையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து நினைவு பரிசு வழங்கிய பின், கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதி முழுவதுமுள்ள தெருநாய்கள் பிரச்சினைகள் குறித்தும் அதற்கு தீர்வு ஏற்படுத்துவது குறித்தும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் N.K.பிரகாஷ், நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர் G.R.P.கார்த்திகேயன், கோபி நகரச் செயலாளர்கள் N.K.சக்தி J.டோனி, கோபி ஒன்றிய செயலாளர் V.R.பழனிச்சாமி, கோபி ஒன்றிய நற்பணி இயக்க அமைப்பாளர் விஜயராஜ், B.கமாலுதீன் பாபு, கோபி ஒன்றிய வட்டச் செயலாளர் நாராயணன், கோபி நகர வட்டச் செயலாளர்கள் இளவரசன், அமுதா இளவரசன் உட்பட்ட மய்யத்தினர் கலந்து கொண்டனர்.
Tags