இதில் கே ஏ செங்கோட்டையன் அவர்கள் உரையில் -
காமராஜர் அவர்கள் 5000 பள்ளிகளை திறந்தார். குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என்பதற்காகவே குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தை மறைந்த முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கொண்டு வந்தார். அவருடைய காலத்தில்தான் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை திட்டத்தையும் கொண்டு வந்தார். அவருக்குப்பின் அவர் வழியில் வந்த புரட்சித்தலைவி அம்மா சிறந்த கல்வியால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும் என்று கூறி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி வைத்து வறுமை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்று கோரி 14 பொருட்களை மாணவ மாணவியருக்கு வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் வழியில் வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியார் தமிழ் வழியில் படித்த மாணவ மாணவியர்களுக்கு 7.5 சதவீத மருத்துவ சீட்டை வழங்கினார். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இந்த மாதிரி இட ஒதுக்கீடு இல்லை. அனைவரும் கல்வியுடன் சேர்ந்து ஒழுக்கத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். தாய் தந்தையரை மதிக்க வேண்டும், ஆசிரியரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த 75 வது சுதந்திர தின விழாவில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதில் கே ஏ செங்கோட்டையன் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்கினார்.