ஈரோடு மாவட்ட தமிழ்நாடு ரேடியோலாஜிக்கல் அசிஸ்டன்ட் அசோசியேஷன் சார்பில், பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு 14.08.2022 அன்று ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட தலைவர் ஆர்.பிரபாகரன் தலைமையில், மாநில துணைத்தலைவர் கரா.கணேஷ் பாபு முன்னிலையில் நடைபெற்றது.
பொதுக்குழு கூட்டத்தில், காலி பணியிடங்களை நிரப்புதல், 5-ம் கட்ட பதவி உயர்வு, சங்கத்தின் பெயரை தனிநபர் தவறாக பயன்படுத்துவதை தடுத்தல்,மருத்துவமனையின் படுக்கை எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் நுண்கதிர் பணியிடங்களை ஏற்படுத்துதல், பொது சுகாதாரத்துறை யில் தலைமை நுண்கதிர் நுட்புணர் பணியிடம் ஏற்படுத்துதல், இசிஜி எடுக்க கட்டாயப்படுத்தலை தடுத்தல், கொரோனா காலத்தில் பணியாற்றிய தற்காலிக பணியிளார்களுக்கு பணி நிரந்தரம்,மருத்துவக் கூட்டமைப்பில் மாவட்டத்தின் கருத்துக்களை கேட்காமல் கூட்டமைப்பில் சேர்ந்தமைக்கு மாவட்டத்தின் சார்பாக கண்டனம் தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.