முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 25.08.2022 வியாழக்கிழமையன்று கொளப்பலூர் வழியாக கள்ளிப்பட்டி செல்ல உள்ளதால்,
கொளப்பலூர் தந்தை பெரியார் திடலில் சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் கொளப்பலூர் திமுக அலுவலகத்தில் 21.08.2022 நேற்று மாலை நடைபெற்றது. அவைத்தலைவர் பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஏ.முருகன், கோபி தெற்கு ஒன்றிய துணை செயலாளர் கோதண்டபானி, சிறுவலூர் மனோகரன், கொளப்பலூர் பேரூர் கழக செயலாளர் மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர் அன்பரசு ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.