கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ சிலை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 13 அரசு துறைகளின் அனுமதி பெறப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கும் பணி தொடங்கியது.
இதேபோல் டி.என் பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள் கிராமப்புற பகுதிகளாக இருப்பதாலும், இங்குள்ள மாணவர்கள் அரசு போட்டி தேர்விற்கு உரிய வழிகாட்டுதல், புத்தகங்கள் இல்லாத நிலையில் போட்டி தேர்விற்கு தேவையான புத்தகங்கள், இணையதள வசதியுடன் கூடிய கலைஞர் படிப்பகமும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்விரு பணிகளும் கடந்த 10 நாட்களாக இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என். நல்லசிவம், டி.என். பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் சிவபாலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்