அந்த வகையில் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பே பொது இடங்கள், வீடுகள் என பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் விநாயகர் சிலை வைத்து 3 நேர பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர்,
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதிஷ்டை செய்த விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்தாலும் அதனையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் உற்சாகமாக ஊர்வலத்தில் கோபிசெட்டிபாளையம் சீதாகல்யாண மண்டபத்திலிருந்து மேள, தாளங்களுடனும், கலைநிகழ்ச்சிகளுடனும் சுமார் 50 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் தொழிலதிபர் T.S.சிதம்பரம், Dr.ரவீந்திரன், தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் சு.பி. தளபதி ஆகியோர் காவிக்கொடியை அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். இவ்வூர்வலமானது ஜீவா செட், பாரியூர் பிரிவு, பேருந்துநிலையம் வழியாக எம்.ஜி.ஆர். சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையை அடைந்தது. மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் குமார், இந்து அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் குரு ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லோகேஸ்வரன், நகர பொதுசெயலாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில் இந்து முன்னணியின் மாநில செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன் எழுச்சியுரை ஆற்றினார். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் நன்றியுரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டபிரபு வரவேற்புரை ஆற்றினார்.
பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து மார்க்கெட், கடைவீதி, தேர்வீதி, வாய்க்கால்ரோடு வழியாக சந்தனதுறை வாய்க்காலில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இதில் கோபி நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர்.
கோபிசெட்டிபாளையத்தின் முக்கிய சாலைகள் வழியாக சென்ற விநாயகர் ஊர்வலத்தின் போது வழி நெடுகிலும் பொதுமக்கள் வழிபாடு செய்தனர்