நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை சுற்றுலா துறை அமைச்சர் டாக்டர். மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அமைச்சர் டாக்டர். மதிவேந்தன் அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பிரபாகர் ஆகியோர் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் :
நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட காவிரி ஆற்றின் கரையோர வெள்ள பாதிப்புக்கு உள்ளான 386 குடும்பங்களை சேர்ந்த 1052 பேர் முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளதாகவும்,
முகாம்களில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு வீடுகள் கட்டி தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், குடிசை மாற்று வாரிய வீடுகளில் தங்க வைப்பதன் மூலம் வெள்ள பாதிப்பு பகுதியில் வசிப்பவர்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.
உடன் குமராபாளையம் வட்டாட்சியர், திமுக மேற்கு மாவட்ட செயலாளர் கே .எஸ். மூர்த்தி, பள்ளிபாளையம் நகர செயலாளர் குமார், நகர அவைத் தலைவர் ஜான் பாய், நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன் மற்றும் நகராட்சி ஆணையாளர் கோபிநாத், அரசு அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்கள் குரு மற்றும் சசி, வினோத் குமார், மங்களம் சுந்தர், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.