கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை வரவேற்கும் விதத்தில் கலைஞர் சிலைக்கு தொடர்ந்து 100 நாட்களுக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியினை தமிழக வீட்டுவசதிதுறை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கிவைத்தார்.
September 06, 2022
0
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கள்ளிப்பட்டியில் சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் படிப்பகத்துடன் கூடிய கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலையை கடந்த 25 ம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த கலைஞர் சிலைக்கு ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டை வரவேற்கும் விதத்தில் தொடர்ந்து 100 நாட்களுக்கு மாலை அணிவித்து தினமும் காலை பொதுமக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் முதல் நாளான 04.09.2022 அன்று தமிழக வீட்டுவசதிதுறை சு.முத்துசாமி கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு உணவு வழங்கி துவக்கி வைத்தார்.
பின்னர் கோபிசெட்டிபாளையத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் என். நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய கழக செயலாளர் சிவபாலன், நகர்மன்றத் தலைவர் என்.ஆர். நாகராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் எஸ்.ஏ. முருகன், முன்னாள் சிக்கோ வாரியத்தலைவர் சிந்து ரவிச்சந்திரன் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் உள்பட திமுகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.