ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையும், கலைஞர் படிப்பகத்தையும் (ஆக.25) நாளை மறுநாள் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதற்காக கடந்த 15 நாட்களாக இரவு பகலாக கலைஞர் படிப்பகம் மற்றும் சிலையின் பீடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
நேற்று இரவு கலைஞரின் முழு உருவச்சிலையை பீடத்தின் மீது நிலை நிறுத்தும் பணி நடைபெற்றது. நவீன இயந்திரங்கள் மூலம் பீடத்தின் மீது சிலை நிறுவப்பட்டு வரும் பணியை அமைச்சர் சு. முத்துசாமி பார்வையிட்டார். இதில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.