தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுக வினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கருணாநிதி நினைவு தினத்தையொட்டி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் நகர் மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் முன்னாள் சிக்கோ வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன் மற்றும் திமுக கவுன்சிலர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.