கைவினைப் பொருட்கள் உலகில் தனியானதொரு இடத்தைப் பிடித்துள்ள, பூம்புகார் என்ற
பெயரால் அனைவராலும் அறியப்படும், தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள்
வளர்ச்சிக் கழகம், தொன்மையான கலைகளை பாதுக்கப்பதோடு கைவினைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை
மேம்படுத்துவதை தமது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்
அதில் தற்போது ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ண ஜெயந்தியை
முன்னிட்டு கிருஷ்ணதர்ஷன் கண்காட்சி மற்றும் விற்பனை 08.08.2022. முதல் 19.08.2022 வரை
நடைபெற்று வருகிறது.
இதைப்பற்றி அதன் மேலாளர்
ஜி.சரவணன் தெரிவித்துள்ள அறிக்கையில் -
இக்கண்காட்சியில் காகித கூழ் கிருஷ்ணர், களிமண் கிருஷ்ணர், பஞ்சலோகத்தலான கிருஷ்ணர்,
பித்தளை கிருஷ்ணர், மார்பில் பவுடரால் செய்யப்பட்ட கிருஷ்ணர், அலிகார் பித்தளை கிருஷ்ணர்
சிலைகள், தஞ்சை ஓவியத்தில் கிருஷ்ணர், நூக்கமர கிருஷ்ணர், சந்தனமர கிருஷ்ணர், கருப்பு மற்றும்
வெண் உலோகத்திலான கிருஷ்ணர் சிலைகள்,பஞ்சலோக கிருஷ்ணர் டாலர் போன்றவை கண்காட்சி
மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டும் 10 சதவித தள்ளுபடி வழங்கப்படுகிறது
அதுசமயம் அனைத்து கடன்/பற்று அட்டைகளுக்கு எவ்வித சேவைக் கட்டணமின்றி ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.