தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் வி. பி. துரைசாமி அவர்கள் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காவிரி ஆற்றில் ஓடும் தண்ணீரை பார்வையிட்டார். அதையடுத்து காவிரியாற்று வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கே நேரில் சென்ற பாஜக மாநில துணை தலைவர் வி. பி .துரைசாமி அங்குள்ள மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து மக்களின் கோரிக்கைகளை விரிவாக எடுத்துக் கூறினார். அப்போது அவருடன் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, நாமக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் G.நாகராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் T. சம்பத், வடக்கு ஒன்றிய செயலாளர் G. சங்கர், பள்ளிபாளையம் நகரச் செயலாளர் V. அசோக் குமார் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
காவிரியாற்று வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் முகாம்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் வி .பி. துரைசாமி ...
August 09, 2022
0