கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பாக சிறப்பு கோவிட் - 19 தடுப்பூசி முகாம்...
September 06, 2022
0
கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பாக சிறப்பு கோவிட் - 19 தடுப்பூசி முகாம் 04.09.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
இதில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மதியம் 1 மணி முதல் மாலை 7 மணி வரை என பல்வேறு இடங்களில், இரு நேர அளவில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் முதலாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் : 4, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் :219, பூஸ்டர் தர்பூசி செலுத்தி கொண்டவர்கள் : 183 என மொத்தம் 406 நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
Tags