ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக டி.என்.பாளையம் ஒன்றியம் கள்ளிப்பட்டியில் அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை மாண்புமிகு முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்ததை தொடர்ந்து,
மாண்புமிகு வீட்டுவசதி துறை அமைச்சர் திரு. சு. முத்துசாமி அவர்களின் அறிவுறுத்தலின்படியும், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் ஆற்றல்மிகு திரு. என். நல்லசிவம் அவர்களின் ஆலோசனையின் படியும், கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் திரு. எஸ். ஏ. முருகன் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் கழகத் தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோபி தெற்கு ஒன்றிய அவை தலைவர் ஓ.பி. மாரியப்பன், துணைச் செயலாளர்கள் கோதண்டபாணி, மூர்த்தி, அமராவதி, நாராயணன், மாவட்ட பிரதிநிதிகள் சீனிவாசன், செங்கோட்டையன், சரவணகுமார், ஒன்றிய பொருளாளர் அயலூர் சண்முகம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.எஸ். வெள்ளியங்கிரி, அவ்வையார் பாளையம் டாக்டர். காளீஸ்வரன், நஞ்சை கோபி,
கணேசன், அபிராமி, வெங்கிடு, முருகன், பாரியூர் சங்கர், சிறுவலூர் காமராஜ், வெள்ளாங்கோவில் தங்கம், மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் திருவேங்கடம், குப்புலட்சுமி, சரஸ்வதி, குமாரசாமி மற்றும் கழக தோழர்களும் நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புக்களும் திரளாக கலந்து கொண்டனர்.