மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு கட்டுமான
தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள்
ஆகியவற்றில் பதியப்பட்டுள்ள் தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு
நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்கள். குறிப்பாக கடந்த ஓராண்டு காலத்தில்
மட்டும் சுமார் ரூ.420 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்
வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம்
30.11.1994 அன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாரிய நலத்திட்டத்தின்
அட்டவணையில் பட்டியலிடப்பட்ட தொழில் இனங்களான கல் உடைப்பவர் (௮) கல்
வெட்டுபவர் (அ) கல்பொடி செய்பவர், கொத்தனார் (அ) செங்கல் அடுக்குபவர்,
தச்சர், பெயிண்டர் அல்லது வார்னிஷ் பூசுபவர், கம்பி வளைப்பவர் உட்பட பிட்டர்,
சாலை குழாய் பதிப்பு பணியாளர், எலக்ட்ரிஷியன், மெக்கானிக், கிணறு
தோண்டுபவர், வெல்டர் என 53 வகையான தொழில்களில் பணிபுரியும்
தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள
தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக
பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982-ம் ஆண்டில் தமிழ்நாடு உடல்
உழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள்
முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. உடலுழைப்புத் தொழிலாளர்களின்
வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால்
17-03.1999 அன்று தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு
நலவாரியம் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2006 முதல் 2011 வரை 15 தனி
நலவாரியங்களும் உருவாக்கப்பட்டன. தற்போது 18 நலவாரியங்கள்
உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பதிவு
மற்றும் புதுப்பித்தலின்போது, வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் 01.09.2009 முதல்
முழுமையாக ரத்து செய்யப்பட்டது. ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்
(சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் 01.11.2008 அன்று முதல்
தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 01.11.2008 முதல் 03.09.2022 வரை
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் 32,253 தொழிலாளர்களும்,
உடலுழைப்பு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் 61,411 தொழிலாளர்களும்
அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி வாகனங்கள் பழுதுபார்க்கும்
தொழிலாளர்கள் நல வாரியத்தில் 4,826 தொழிலாளர்களும் ஆக மொத்தம் 98,490
தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
மேலும், தற்போது வரையில் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் 2157
தொழிலாளர்களும், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் 3392
தொழிலாளர்களும் மற்றும் அமைப்புசாரா ஒட்டுநர் நல வாரியத்தில் 224
தொழிலாளர்களும் மொத்தம் 5773 தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெற்று
வருகின்றனர். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு பதவியேற்ற
07.05.2021 முதல் தற்போது வரையில் ஈரோடு மாவட்டத்தில் 10843
தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகையாக
ரூ.2, 11,34,000/-ம், 30 தொழிலாளர்களுக்கு திருமண உதவித்தொகையாக
ரூ.1,06,000,“ம், 2 தொழிலாளர்களின் மகப்பேறுக்கான உதவித்தொகையாக
ரூ.12,000/-“ம், 26 தொழிலாளர்களுக்கு கண் கண்ணாடிக்கான
உதவித்தொகையாக ரூ.13,000/-ம், இயற்கை மரணமடைந்த 347
தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.99,81,000/-ம்,
விபத்தில் மரணமடைந்த 9 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.9,25,000/-,
பணியிடத்து விபத்து மரணமடைந்த 1 தொழிலாளியின் குடும்பத்திற்கு
ரூ.5,00,000,/-ம், 60 வயது நிறைவடைந்த 2496 தொழிலாளர்களுக்கு புதிய
மாதாந்திரம் ஒய்வதியமாக ரூ.24,96,000/- மொத்தம் 13755 பதிவு பெற்ற
தொழிலாளர்களுக்கு ரூ.3,51,67,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இன்றைய தினம் (07.09.2022) அமைப்புசாரா
தொழிலாளர்கள் 17 நபர்களுக்கு ரூ.59,000/- மதிப்பில் திருமண
உதவித்தொகையும், ஒரு நபருக்கு ரூ.3,000/- மதிப்பில் மகப்பேறு
உதவித்தொகையும், 533 நபர்களுக்கு ரூ.9,50,650/- மதிப்பில் கல்வி
உதவித்தொகையும், 620 நபர்களுக்கு ரூ.6,20,000/- மதிப்பில் ஓய்வூதியமும், 5
நபர்களுக்கு ரூ.1,59,000,/- மதிப்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான
உதவித்தொகையும், 1490 பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு
ரூ.23,57,233/- மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்களும் என மொத்தம் 2666
நபர்களுக்கு ரூ.41,48,883/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது
என தெரிவித்தார்.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் பதிவு பெற்ற 2666 கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.41,48,883,/- மதிப்பிட்டில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
September 07, 2022
0
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (07.09.2022) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில், தலைவர், தமிழ்நாடு கட்டுமான
தொழிலாளர்கள் நல வாரியம் திரு.பொன்குமார் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு ஈரோடு
மாநகராட்சி மேயர் திருமதி.சு.நாகரத்தினம் மற்றும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் பதிவு பெற்ற 2666 கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு
ரூ.41,48,883/- மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மரியாதைக்குரிய துணை மேயர் திரு.வே.செல்வராஜ்,
தொழிலாளர் இணை ஆணையர் திருமதி.ஜி.சசிகலா, உதவி ஆணையர் (சமூக
பாதுகாப்புத் திட்டம்) திரு.த.முருகேசன் உட்பட தொழிற்சங்க பிரதிநிதிகள்,
உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திரு.பொன்குமார் அவர்கள் பேசுகையில்,