இவ்விழாவில், ஈரோடு மாநகராட்சி மாண்புமிகு மேயர் திருமதி.நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் தலைமை தாங்கினார், மரியாதைக்குரிய துணை மேயர் திரு வி. செல்வராஜ் அவர்கள் மற்றும். மாநகராட்சி ஆணையாளர் உயர்திரு. க. சிவகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் தலைவர் திரு.எம்.சின்னசாமி அவர்கள், துணைத்தலைவர் திரு.சிடி.வெங்கடேஸ்வரன் அவர்கள், செயலாளர் திரு.எஸ்.கணேசன் அவர்கள்,
இணைச்செயலாளர் திரு.எம்.சி.ராபின் அவர்கள், பொருளாளர் திரு. எஸ்.கே.எம் ஸ்ரீ சிவ்குமார் அவர்கள், நீர் மேலாண்மைக்குழு தலைவர் திரு.சி.டி.சண்முகசுந்தரம் அவர்கள் , நீர் மேலாண்மைக்குழு உதவித்தலைவர்
திரு.சி.ஏ.வேல்முருகன் அவர்கள், அறங்காவலர்கள் திரு.ஆர்.ஜி.சுந்தரம் அவர்கள், திரு.என்.ஸ்ரீனிவாசன் அவர்கள், திரு.ஆர்.ஆர்.சத்தியமூர்த்தி அவர்கள், திரு.ஏ.யோகேஷ்குமார் அவர்கள், திரு.ஆர்.ரகுராம் அவர்கள் ,
ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையாளர் திருமதி. விஜயா அவர்கள் ( மண்டலம் – 3 ), உதவி செயற்பொறியாளர் திரு. தங்கராஜ் அவர்கள், இளநிலை பொறியாளர் திரு. தனுஷ்கோடி அவர்கள், ஈரோடு மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். நீர் வளம் நிறைந்த ஈரோட்டை உருவாக்கும் முயற்சியில் கடந்த ஏழு ஆண்டுகளில் ஒளிரும் ஈரோடு உருவாக்கிய நீர்நிலைப் பணிகளின் வரிசையில் இது ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷனின் 50 வது பணியாகும். இதன் மொத்த திட்ட மதிப்பீடு தொகை : ரூ : 54.50 லட்சம் ஆகும்.
இதுகுறித்து ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில், குடிநீர் மற்றும் விவசாய ஆதாரங்களை மேம்படுத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷனின்
நீர் மேலாண்மைக் குழு திட்டங்களில் குளம், குட்டை, தடுப்பணை, ஓடை, ஏரி, கால்வாய் போன்ற நீர்நிலைகளை தனது நிதியிலிருந்து தூர்வாரி ஆழப்படுத்தி, நீர்நிலைகளில் அதிக அளவில் நீரைத்தேக்கும்
பணிகளை செய்து வருகின்றது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் மூலம் 49 நீர் நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷனின் “ஊருக்கு ஒரு குளம்”
திட்டத்தின் கீழ் 8 புதிய குளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 3 புதிய தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. பல வருடங்களாக தூர்வாராமல் இருந்த 16 கி.மீ நீளமுள்ள பெரும்பள்ளம் நஞ்சை ஊத்துக்குளி
கால்வாயை தூர்வாரி புனரமைக்கப்பட்டுள்ளது. (சூரம்பட்டி அணைக்கட்டு முதல் நஞ்சை ஊத்துக்குளி வரை) 90 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த, மண்மூடிப்போன ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில்
தெப்பக்குளத்தை கண்டறிந்து புனரமைத்துள்ளோம். வரலாற்று சிறப்புமிக்க சுமார் 736 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட காளிங்கராயன் கால்வாயை சுமார் 20 கி.மீ நீளம் தூரம் வரை சுத்தம் செய்துள்ளோம்.
( கோனவாய்க்கால் முதல் பாசூர் வரை) பணிகள் செய்யப்பட்ட மொத்த பரப்பளவு 184.18 ஏக்கர் ஆகும். முன்பு நீர் சேமிப்பு கொள்ளளவு சுமார் 54.26 கோடி லிட்டர் ( 0.019 TMC) மட்டுமே இருந்த நிலையில் பணிகள்
முடிக்கப்பட்ட பின்பு நீர் சேமிப்பு கொள்ளளவு சுமார் 262.29 கோடி லிட்டராக ( 0.09 TMC ( 79.31 %) உயர்ந்துள்ளது. நீர் நிலைகளை தூர் வாருதல், “ஊருக்கு ஒரு குளம்” திட்டத்தின் கீழ் புதிய குளம் உருவாக்குதல்,
புதிய தடுப்பணைகள் கட்டமைத்தல் மற்றும் வரலாற்று சிறப்புவாய்ந்த தெப்பகுளத்தை புனரமைத்தல், உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புக்கான விருது பெற்ற காளிங்கராயன் கால்வாயை சுத்தம் செய்தது ஆகிய
நீர் மேலாண்மை பணிகளின் மொத்தம் திட்ட செலவுகள் சுமார் ரூ.4.39 கோடி ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.