ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட மொத்தம் 44 வாகனங்களில் பொது ஏலம் நடத்தப்பட்டு 40 வாகனங்கள் ரூ.10,97,636/- க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
September 07, 2022
0
ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட
தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 14(4)-ன்படி அரசுக்கு பறிமுதல்
செய்யப்பட்டுள்ள 4 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம்
மற்றும் 39 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 44 வாகனங்கள் மாவட்ட
ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின்
உத்தரவின் பேரில் இன்று 07.09.2022-ம் தேதி ஈரோடு மாவட்டம்,
ஆனைக்கல்பாளையத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை
மைதானத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் ஆயுதப்படை காவல்
துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட
பொதுமக்கள் கலந்து கொண்ட பொது ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில்
மேற்கண்ட 44 வாகனங்களில் நான்கு சக்கர வாகனம் - 3, மூன்று சக்கர
வாகனம் -1 மற்றும் இரண்டு சக்கர வாகனம்- 36, மொத்தம் - 40 வாகனங்கள்
ஏலத்தில் எடுக்கப்பட்டது.