இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் மற்றும் ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்.
September 07, 2022
0
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பண்ணாரி அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் இன்று (07.09.2022) அந்தியூர்
சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம், கூடுதல் ஆணையர் (இந்து
சமயம் மற்றும் அறநிலையத்துறை) திரு.கண்ணன் இஆப., மற்றும் கூடுதல்
ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்
திரு.லி.மதுபாலன் இஆப., ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு இந்து
சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள்
ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின்போேது இணை ஆணையர், இந்து சமய
அறநிலையத்துறை, ஈரோடு மண்டலம் திரு.பரஞ்ஜோதி, உதவி ஆணையர்
இந்து சமய அறநிலையத்துறை, திரு.மொ.அன்னக்கொடி, தொல்பொருள்
துறை உதவி இயக்குநர் (ஓய்வு) திரு.சுப்பிரமணியன், இந்து சமய
அறநிலையத்துறை வட்டாட்சியர் திரு.தாமோதரன் மற்றும் கோயில் செயல்
அலுவலர்கள் திரு.அருள்குமார், திருமதி.கயல்விழி உட்பட இந்து சமய
அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுகளின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை
அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம்
தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் அமைந்த
இந்த புதிய அரசு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பல்வேறு
திருப்பணிகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் பல ஆண்டுகளாக
நிலுவையில் இருந்த திருப்பணிகளை நிறைவு செய்து குடமுழுக்கு நடத்துவது,
ஆகம விதிமுறைகளைகளின்படி 12 ஆண்டுகள் கடந்து திருப்பணிகள்
மேற்கொள்ளாத திருக்கோயிலுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு, ஆயிரம்
ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களில் பழமை மாறாமல் திருப்பணிகள்
மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டது மட்டுமல்லாமல், நடப்பாண்டிற்கு சுமார்
ரூ.100.00 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
இந்த ஆண்டு தஞ்சாவூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுமார் 490
திருக்கோயில்களில் ஒருகால பூஜை கூட நடத்த முடியாத
திருக்கோயில்களையும் கண்டறிந்து, அந்த திருக்கோயில்களில்
பணிபுரிவர்களுக்கு உரிய ஊதியத்தினையும் வழங்கும் வகையில், ரூ.3.00
கோடியை அரசு மானியமாக முதன்முதலாக தஞ்சாவூர் தேவஸ்தானத்திற்கு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கீடு செய்து
தந்துள்ளார்கள்.
மேலும், தமிழகத்தில் ஏற்கனவே இருக்கின்ற ஒருகால பூஜை திட்டத்தின்
கீழ் இருக்கின்ற திருக்கோயில்களுக்கு வைப்பு நிதி ஏற்படுத்தப்பட்டு,
ஒவ்வொரு திருக்கோயில்களுக்கும் ரூ.1.00 இலட்சம் வைப்பு நிதியாக சுமார்
11959 திருக்கோயில்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த வைப்பு நிதியை
ரூ.2.00 இலட்சமாக்கி அத்திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள்
மற்றும் ஊழியர்களுக்கு இதுவரை எந்தவிதமான பணி உத்தரவாதம் இல்லாமல்
இருந்த நிலையில் ரூ.1000,/- மாதந்தோறும் ஊக்கத்தொகையாக அவர்களின்
வங்கி கணக்கில் செலுத்துவதற்குண்டான ஆணையிட்டு, அப்பணிகள்
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மேலும், ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட வேண்டிய பல
திருக்கோயில்கள் குறித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்
கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் இந்த ஆண்டு 2000 திருக்கோயில்களை
11959 திருக்கோயில்களுடன் உத்தரவிட்டு, ரூ.40.00 கோடி வைப்பு நிதியை
அரசு மானியமாக ஒதுக்கீடு செய்து தந்துள்ளார்கள். மேலும் இந்த 2000
திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு
மாதந்தோறும் ரூ.1000/- ஊக்கத்தொகையாக வழங்கவும்
உத்தரவிட்டுள்ளார்கள்.
இதுபோன்று வரலாற்றில் இல்லாத அளவிற்கு, இந்து சமய
அறநிலையத்துறையின் கீழ் செயல்படும், திருக்கோயில்களை புனரமைப்பது
அதோடு மட்டுமல்லாமல் திருப்பணிகளை உரிய காலத்தில் நடத்துவது, மேலும்
கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு தேவையான கழிப்பிடம், குடிநீர்
உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது, திருக்கோயில்களில்
இருக்கின்ற திருக்குளங்கள், திருத்தேர்கள், நந்தவனங்கள் பராமரிப்பு, பழைய
திருத்தேர்கள் புதுப்பிப்பதும், தேவைப்படுகின்ற இடங்களில் புதுத்தேர்களை
உருவாக்குவதும் இந்த அரசு கடமையாக ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை
செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அதன் ஒருபகுதியாக 24 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம்
நடைபெற்ற நம்முடைய சேலம் மாவட்டத்திற்கு உள்ளடங்கிய, அருள்மிகு
சுகவனேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த ஆண்டு இதேபோல் ஆகஸ்ட் மாதம்
இதேபோல் ஆய்வு செய்யப்பட்டது. ஓராண்டுக்குள் திருப்பணிகளை நிறைவு
செய்து, கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும் என்று அலுவலர்களுக்கு
உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் பக்தர்கள் மகிழ்ச்சி அடைகின்ற
வகையில், சேலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்
இனிதே நடந்தேறியது.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம்
பண்ணாரியில் உள்ள அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில்
இன்றைய தினம் (07.09.2022) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், இத்திருக்கோயிலில்
நாள்தோறும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலுக்கு
பல்வேறு நிலைகளில் பக்தர்கள் அதிகளவில் வருவதும், வனத்தை ஒட்டி உள்ள
பகுதி, மூன்று புறமும் நதிகள் ஓடுகின்ற பகுதி என சிறப்பு வாய்ந்த
திருக்கோயில் என்பதால், கட்டமைப்புகளை மேலும் உயர்த்தி தர மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், சட்டமன்ற
அறிவிப்பாக, திருக்கோயிலை சுற்றி சுமார் ரூ.1.92 கோடி செலவில்
சுற்றுச்சுவர் அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் இத்திருக்கோயில் மகா மண்டபம் மற்றும் சோபன
மண்டபத்தில் கியூ வரிசையில் கைப்பிடியாக சில்வரில் வருகின்ற அந்த பகுதி
முழுவதுமாக பித்தளையாக அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கென
ரூ.87.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இராஜ கோபுரம் கட்டுமான
பணி ரூ.11.50 கோடி செலவில் 9 நிலை இராஜ கோபுரம் மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அதேபோல் இத்திருக்கோயிலுக்கு மாதந்தோறும் 2.00 இலட்சம்
பக்தர்கள் வருகை தருகின்றார்கள். திடீரென அவர்களுக்கு மருத்துவ வசதி
தேவைப்படுகின்ற பொழுது, மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினறார்கள்.
அவர்களின் நலனை கருதி இத்திருக்கோயில் வளாகத்திலேயே
மருத்துவமனையை ஏற்படுத்தி தருவதற்கும் மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். கூடிய விரைவில் மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அந்த மருத்துவமனையை திறந்து
வைப்பார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், நாளொரு மேனியும் பொழுதுதொரு வண்ணமுமாக இந்து சமய
அறநிலையத்துறையானது பக்தர்களின் தேவையை நிறைவேற்றுகின்ற
பணிகளில் எங்களை நாங்கள் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளோம்
என தெரிவித்தார்.
தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அருள்மிகு வாரணாம்பிகை
உடனமர் ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு
நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்டு,
தெரிவித்ததாவது,
ஈரோடு மாநகர், கோட்டை, அருள்மிகு ஆருத்ர கபாலீஸ்வரர் வகையறா
இத்திருக்கோயில் நிர்வாகம் நிலை 2 செயல் அலுவலராலும், பரம்பரை
முறைவழிசாரா அறங்காவலர்கள் 24.02.2021 அன்று நியமனம் செய்யப்பட்டு
அறங்காவலர்குழு தலைவர் 26.02.2021 அன்று முதல் செயல்பட்டு வருகிறது.
இத்திருக்கோயிலில் பசலி 1430-ம் ஆண்டின் சகாயத்தொகை நிர்ணய
வருமானம் ரூ.72,45,788/” ஆகும். இத்திருக்கோயிலின் முக்கிய வருமானம்
உண்டியல் வரவு, கட்டணச்சீட்டுகள் விற்பனை, நன்கொடை வரவு, முதலீடுகள்
வட்டி வரவு மற்றும் தற்காலிக கடைகள் ஏலம் உரிமம் ஆகியவற்றின் மூலம்
கிடைக்கப்பெற்று வருகிறது.
அருள்மிகு ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோயில் பழமைவாய்ந்த
கல்வெட்டுகள், கட்டட அமைப்பு, சிற்பங்கள் ஆகியவற்றை நோக்கும்போது
இத்திருக்கோயில் கி.பி.10-11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும்.
இத்தலத்து இறைவனை தேவலோக மாதார்கள் சிறுநல்லாள் பெருநல்லாள்
ஆகியோர் பூசித்து இந்திரனை பூமாரி பொழியச் செய்த சிறப்பினை உடையது
என்றும், தாண்டவன் என்னும் நெசவாளி குளிரால் நடுங்கிய ஒரு அன்பருக்கு
அளித்த ஆடையானது மறுநாள் திருத்தொண்டீசுவரர் திருமேனியில்
காணப்பட்ட அற்புதம் நிகழ்ந்த தலமாகும்.
சிறப்பு பெற்ற இத்திருக்கோயிலின் குடமுழுக்கு கடந்த 11.09.2008
அன்று நடைபெற்றுள்ளது. இத்திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று 12
ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், கடந்த 02.12.2019 அன்று திருப்பணிகள்
மேற்கொள்ள பாலாலயம் செய்யப்பட்டது. மேற்காணும், திருக்கோயில்
திருப்பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சரின் அறிவுரையின்படி, கடந்த 23.07.2021 அன்று ஆய்வு
மேற்கொள்ளப்பட்டு திருப்பணிகளை விரைவுபடுத்தி முடித்திட உரிய
அறிவுரைகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருக்கோயில் முழுமையும் பழுது பார்த்து
புதுப்பித்தல் பணி, புதிதாக அன்னதான கூடம் கட்டும்பணி, சுவாமி வாகன
மண்டபத்திற்கு மேற்கூரை அமைத்தல் பணி, கருங்கல் தரைதள பணி, புதிதாக
மின்பராமரிப்பு அமைத்தல், மூலவர் மற்றும் நடராஜர் கொடிமரங்கள் தங்க
முலாம் பூசும் பணி, நடராஜர் சன்னதி படிகளில் வெள்ளி தகடுகள் போர்த்தும்
பணி, நடராஜர் சன்னதி மண்டபத்தில் பித்தளை மற்றும் செம்பிலான சப்பரம்
போர்த்தும் பணி இதர திருப்பணிகள் என மொத்தம் 30க்கும் மேற்பட்ட
திருப்பணிகள் ரூ.1,48,52,000,* மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மேற்படி திருக்கோயிலின் திருப்பணி மற்றும் குடமுழுக்கு
பெருவிழா சிறப்பாக நடைபெறும் வகையில் மாண்புமிகு தமிழக முதல்வரின்
வழிகாட்டுதலின்படி, நகரின் முக்கிய பிரமுகர்கள் 18 நபர்கள் அடங்கிய
குடமுழுக்கு விழாக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன்பின்னர்,
திருப்பணிகள் அனைத்தும் முழுவீச்சில் செய்யப்பட்டு, அனைத்தும் நிறைவு
பெற்று நாளை (08.09.2022) காலை 10.35 முதல் 11.35 மணிக்குள்
திருக்குடமுழுக்கு நடைபெறுவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் இந்து சமய
அறநிலையத்துறையின் சார்பில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என
தெரிவித்தார்.
Tags