கோபி பச்சைமலை பகுதியில் பகுதி நேர நியாயவிலை கடையில் முதல் விற்பனையை, இன்று கோபி நகர் மன்றத் தலைவர் என்.ஆர்.நாகராஜ் தொடங்கி வைத்தார்.
September 06, 2022
0
ஈரோடு மாவட்டம், கோபி பச்சைமலை பகுதியில் கே. 544 கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கம் புதுப்பாளையம்-2. பகுதி நேர நியாயவிலை கடையாக, கடந்த 26.08.2022 அன்று
மாண்புமிகு.தமிழக முதல்வர் தளபதி. "மு.க.ஸ்டாலின்" அவர்கள் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று 06.09.2022 செவ்வாய்கிழமை கோபி நகர் மன்றத் தலைவர் திரு. என்.ஆர்.நாகராஜ் அவர்கள் நியாயவிலை கடையின் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
கோபி ஒன்றியக் குழு உறுப்பினர் சிறுவலூர் திரு. S.A.முருகன் அவர்கள், மொடச்சூர் ஊராட்சித் தலைவர் திரு. சரவணக்குமார் அவர்கள், ஊராட்சி உறுப்பினர் திரு.திருவேங்கடம் அவர்கள்,
சங்க மேலாளர் திரு. சோமு அவர்கள், வருவாய் ஆய்வாளர் திரு.ரஞ்சித்குமார் அவர்கள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.