Type Here to Get Search Results !

எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

SDPI கட்சியின் மீது கலங்கத்தை ஏற்படுத்தும் விதமாக SDPI கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் சையது அலி உள்ளிட்ட பலர் மீது பொய் வழக்கு பதிந்துள்ளதாக கூறி    ஈரோட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட துணைத்தலைவர் ஆட்டோ அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் அபூபக்கர் சித்தீக் வரவேற்புரையாற்றினார்.
SDTU தொழிற்சங்க மாநில பொருளாளர் ஹசன் பாபு,  எஸ்.டி.பி.ஐ மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் முகமது லுக்மானுல் ஹக்கீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறியாளர் அணியின் துணை செயலாளர் சாதிக்,  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹசன் அலி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இப்போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் ம. ஃபர்ஹான் அகமது, மாவட்ட செயலாளர் அ.சாகுல் ஹமீது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.முனாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.