கோபிசெட்டிபாளையத்தில் இன்று மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்வு - என்.ஆர். நாகராஜ் அவர்கள் மிதிவண்டிகளை வழங்கினார்.
September 07, 2022
0
தமிழகம் முழுவதும் பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முருகன் புதூர் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மொடச்சூர் நகரவை மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கோபிசெட்டிபாளையம் நகர்மன்றத் தலைவர் என்.ஆர். நாகராஜ் அவர்கள் மிதிவண்டிகளை வழங்கினார். உடன் விஜய கருப்புசாமி, செந்தில், 28 வார்டு மகேஸ்வரி, தலைமை ஆசிரியர் அன்னகாமு, ஆசிரியர்கள் விசாலாட்சி, செல்வராணி, கௌரி, மதுமதி ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.