சாரதா வித்யாலயா நடுநிலைப்பள்ளி 1919 ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த பள்ளி துவங்கிப்பட்டு 100 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் கலை நிகழ்ச்சிகள், பரிசுகள் வழங்குதல், பள்ளி ஆசிரியர்களை கவுரப்படுத்தி விருதுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த நூற்றண்டு விழாவின் நிறைவு நாளாக இன்று சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் இவ்விழாவில் வைரவிழா பள்ளியின் தாளாளர் தட்சணாமூர்த்தி, முன்னாள் மருத்துவ இணை இயக்குனர் மருத்துவர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் பள்ளி நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுக்கு
கேடயம் வழங்கியும், மானவிகளுக்கு பரிசுகளை வழங்கியும் சிறப்பித்தார்.
மேலும் இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள் பக்தி பாடல்கள் பாடியும், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ஒரு பள்ளி நடத்துவது என்பது எவ்வளவு சிரமமானது என்பது எனக்கு நன்கு தெரியும். அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் இந்த பள்ளி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு படித்த மாணவ மாணவியர்கள் பல்வேறு இடங்களில் மருத்துவராகவும், பொறியாளராகவும், வழக்கறிஞராகவும், ஆடிட்டராகவும் சிறந்து விளங்குகின்றனர. அடித்தட்டு மக்களும் பயன்பெற வேண்டுமென்பதற்காகவே புரட்சித்தலைவர் சத்துணவு கொண்டு வந்தார். அதற்குப்பின் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 14 பொருட்களைக் கொடுத்து மாணவ மாணவிகளை பள்ளிக்கு வர வைத்தார். இந்தியாவிலேயே கல்விக்கு 38,000 கோடி ஒதுக்கியது அம்மாவிற்கு பின்வந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி தான் என்று கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக பொருளாளர் கந்தவேல் முருகன், கோபி நகரச் செயலாளர் கணேஷ், நகர தொழில்நுட்ப செயலாளர் முத்து ரமணன் மற்றும் கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வன், தனசேகரன் ஆகியோர் மற்றும் மாவட்ட அம்மா பேரவை துணைத்தலைவர் சக்தி கணேஷ், வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிவி ரத்தினசபாபதி, ஆடிட்டர் பாலு பாலசுப்பிரமணியம், ஆடிட்டர் சந்திரமவுலி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். விழாவின் கடைசியில் 11ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் திரு. முத்துராமன் அவர்கள் பள்ளிக்கு R.O. வாட்டர் அமைப்பதற்காக ரூ 50 ஆயிரம் வழங்கினார்.
✍️ கோபி செய்தியாளர் - சிவக்குமார்.