பாரதப் பிரதமரின் சுயசார்பு பாரதத்தை உருவாக்கிடும் பணியினை கையில் எடுத்து செயல்படுத்தி சுய உதவிக் குழுக்களின் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு, நிலையான வருமானம் மற்றும் சமுதாய அந்தஸ்து ஆகியவற்றை உயர்த்தும் வகையில் உன்னத பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் "குருவி கிரியேஷன்ஸ்" எனும் நிறுவனமானது 25 வது வெள்ளி விழா ஆண்டு பயணத்தை அங்கீகரிக்கும் வகையிலும், மகளிர் சுய உதவி குழு மூலமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்தும் வகையிலும் இன்று 05.10.2022 புதன்கிழமை அந்தியூர் பர்கூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள "குருவி கிரியேஷன்ஸ்" எனும் கைவினை உற்பத்தி பொருட்களின் விற்பனையகத்தினை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் ஸ்ரீவித்யா அவர்கள், குருவி கிரியேஷன்ஸ் பி.எம்.குமார் அவர்கள் ஆகியோர் மற்றும் கண்மணி தொழில் குழு, சங்கமும் தொழில் குழு, மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மகளிர் சுய உதவிக் குழு மூலம் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களின் விற்பனையகம் திறப்பு விழா - டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் தொடங்கி வைத்தார்
October 05, 2022
0
Tags