முன்னாள் சுதந்திர போராட்ட வீரரும், திரைப்பட நடிகையுமான கொடுமுடி கோகிலம் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் 114-பிறந்தநாள் விழா கொடுமுடியில் இன்று 26.10.2022 புதன்கிழமை கே.பி. சுந்தராம்பாள் தமிழிசைப் பேரவை சார்பில் கொடுமுடி நுழைவுபாலம் அருகே சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் குத்து விளக்கேற்றி, அலங்கரிக்கப்பட்ட கே.பி. சுந்தராம்பாள் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துப்பட்டது. தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க மாநில பொருளாளர் அன்னைபாலன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி தலைமை தாங்கினார். மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள், முன்ளாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.சௌந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்து குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்கள்.
இதில் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.செந்தில்குமார், கொடுமுடி கிழக்கு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், காங்கிரஸ் கட்சி சார்பில் மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.எம்.பழனிசாமி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள்.ஜி.ராஜன், ஒன்றிய கவுன்சிலர் பரமசிவம் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டு கே.பி.சுந்தராம்பாள் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.