கோபி தாலுக்கா தேவர் பேரவை தலைவர் எம் .என். நாகராஜா தேவர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பசும்பொன் தேவரின் முழு உருவ சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து பொதுமக்களுக்கு 100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜிகே செந்தில் குமார், நகர தேவர் பேரவை செயலாளர் எம் ஆர் தங்கராஜ், துணை செயலாளர் என்.முருகன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி சத்திய பாமா, முன்னாள் நகர் மன்ற தலைவர் கேகே கந்தவேல் முருகன், கோபி ஊராட்சி ஒன்றிய தலைவர் மவுலீஸ்வரன், கோபி நகர செயலாளர் பிரிநீயோ கணேஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் அருள் ராமச்சந்திரன், நகர அண்ணா திமுக பாசறை செயலாளர் எஸ் லீலாவதி, நகர 28 வது வார்டு செயலாளர் எம் .எ. செல்வம், தேவர் பேரவை நிர்வாகிகள் பி. அழகேசன், எம் ஆர் பழனிச்சாமி, எம் கே கதிரவன், டி சதீஷ், கே. ஐயர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது குருபூஜை ஜெயந்தி விழா.
October 31, 2022
0
ஈரோடு மாவட்டம் கோபி தாலுக்கா தேவர் பேரவையின் சார்பில் கோபி மொட்டச்சூர் தாந்தோன்றி அம்மன் கோவில் அருகே பசும்பொன் உ முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது குருபூஜை ஜெயந்தி விழா.