S.S.P. நகரில் பகுதி சபை கூட்டத்தை அமைச்சர் சு.முத்துசாமி துவங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
November 01, 2022
0
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக ஈரோடு மாநகராட்சி மண்டலம் II-ல் உள்ள 9வது வார்டுக்குட்பட்ட S.S.P நகரில் பகுதி சபை கூட்டத்தை மாண்புமிகு தமிழக வீட்டுவசதி துறை மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் துவங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வெ.செல்வராஜ், மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.