நீட் தேர்வில் 518 மதிப்பெண்கள் பெற்று தேவதர்ஷினி அவர்களை இல்லத்திற்கு சென்று மக்கள் நீதி மையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
October 19, 2022
0
நீட் தேர்வில் தமிழக கோபிசெட்டிபாளையம் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பயின்ற மாணவி தேவதர்ஷினி என்பவர் நீட் தேர்வில் அரசு அறிவித்துள்ள 7.5% இட ஒதுக்கீட்டில் 518 மதிப்பெண்கள் பெற்று தர வரிசை பட்டியலில் முதலிடம் பெற்றார். அவரை அவர்களது இல்லத்திற்கு சென்று மக்கள் நீதி மையம் சார்பாக வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார், நகரச் செயலாளர் ஜே. டோனி மற்றும் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.