தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழுவின் சார்பில் உலக தபால் தினம் நேற்று (10.10.2022) கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் அவர்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடிதம் எழுதினர்.
நிகழ்வில் தளிர்விடும் பாரதத்தின் தலைவர் சீனிவாசன், செயலாளர் பிரபு ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தி பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடிதம் எழுதும் முறையையும், கடிதம் எழுதுவதின் அவசியத்தை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர்.