சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் துப்பாக்கி சுடும் போட்டி - முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் கலந்து கொண்டார்.
October 16, 2022
0
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் அவர்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தங்கப் பதக்கங்களையும், பரிசுகளையும் வழங்கினார். பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் போதைப் பொருட்களை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் கோபி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் வாசுதேவன் என்கிற பெருமாள்சாமி, கோபி கலைக் கல்லூரி தாளாளர் பரணிதரன், கோபி பவுண்டேசன் நிறுவனர் டாக்டர். அனுப் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.