கோபிசெட்டிபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி...
October 22, 2022
0
கோபிசெட்டிபாளையம் நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில், நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் மற்றும் ஆணையாளர் பிரேம் ஆனந்த் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நகராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் உழவன் ரோட்டரி சங்க தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் யுத்தேஸ்வரன், பொருளாளர் ரோசாரியோ ஆகியோர் இனிப்புகள் வழங்க ஏற்பாடுகளை செய்திருந்தனர். நகராட்சி துப்புரவாளர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன் ஆகியோருடன் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் தூய்மை பாரத திட்ட பரப்பரையாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Tags