தூய்மையின் இரு வண்ணங்கள் என்ற தலைப்பில் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் சுய புகைப்படம் எடுக்கும் பதாகை...
October 20, 2022
0
தூய்மையின் இரு வண்ணங்கள் என்ற தலைப்பில் கோபிசெட்டிபாளையம் நகராட்சியும், கோபி உழவன் ரோட்டரி சங்கமும் இணைந்து பேருந்து நிலையத்தில் சுய புகைப்படம் எடுக்கும் பதாகையை நிறுவினர். இதில் எனது குப்பை எனது பொறுப்பு, என் நகரம் என் பெருமை என்ற வாசகங்களுடன் மக்கும் குப்பைகளை பச்சை வண்ண குப்பை தொட்டியிலும், மக்காத குப்பைகளை நீல நிற குப்பைத் தொட்டியிலும் பிரித்து வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் சுய புகைப்படம் எடுக்கும் பதாகையை பேருந்து நிலையத்தில் நிறுவியுள்ளனர். நகர்மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ், கோபி உழவன் ரோட்டரி சங்க தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் உத்தேஸ்வரன், பொருளாளர் ரோசாரியோ ஆகியோர் திறந்து வைத்தனர். இவர்களுடன் நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன் மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் பழனிச்சாமி, பூங்கொடி, தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் அருண் பிரசாத், காளியம்மாள், அருள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.