திமுக அரசை கண்டித்து போராடிய, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடியார், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்ததை கண்டித்து பள்ளிபாளையம் நால்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டமும், சாலை மறியலும் நடைபெற்றது.
பள்ளிபாளையம் நான்கு ரோடு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க. கட்சியைச் சார்ந்த நிர்வாகிகளை காவல்துறை கைது செய்தனர்.
மறியலில் பள்ளிபாளையம் நகர கழக செயலாளர் பி.எஸ் வெள்ளியங்கிரி, தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சேர்மன் எஸ் செந்தில், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குமரேசன், ஆலம்பாளையம் பேரூர் கழக செயலாளர் செல்லதுரை, நகர துணை கழக செயலாளர் ஜெய்கணேஷ், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன், நகர மாணவரணி தலைவர் ஆடிட்டர் ராஜா மற்றும் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், சார்பு அணி நிர்வாகிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவித்தனர்.