அதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி (வார்டு D & E) மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பட்டா பெறுவது தொடர்பாக எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அவரது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் அந்த கோரிக்கை மனுவில் "3,000-க்கும் மேற்பட்ட பட்டாக்கள் பரிசீலனை செய்து நில அளவை செய்து வழங்கும் போது அதை அந்தந்த குறிப்பிட்ட வார்டுகளில் முகாம்களை ஏற்படுத்தி பட்டா வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஈரோடு மாநகர எல்லைக்குள் பட்டா வழங்குவதற்கு அந்த பிரச்சினைகள் உள்ள பகுதிகளிலே முகாம்கள் அமைக்கலாம். கீழ்க்கண்ட பகுதிகள் தங்கள் பார்வைக்கு ;
காரை வாய்க்கால், மரப்பாலம், வலையக்கார வீதி, கோட்டைப் பகுதி, மணிக்கூண்டு பகுதி, கருங்கல்பாளையம் பகுதி, பிரப்ரோடு, நேதாஜி சாலை, முனிசிபல் சத்திரம், கச்சேரி வீதி, கிருஷ்ணா திரையரங்க பகுதி.