கே எஸ் அழகிரி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பல் மருத்துவ முகாம் - தோப்பு வெங்கடாசலம் அவர்கள் துவக்கி வைத்தார்.
October 20, 2022
0
இன்று ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் திரு. கே எஸ் அழகிரி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் நடைபெறும் பல் மருத்துவ முகாம் ஈரோடு பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த முதல் நாள் பல்மருத்துவ முகாமை முன்னாள் தமிழக அமைச்சர் திரு. தோப்பு வெங்கடாசலம் அவர்கள் துவக்கி வைத்தார். ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் டாக்டர் மக்கள் ஜி ராஜன் அவர்கள் மருத்துவ முகாமை நடத்திய நந்தா பல் மருத்துவக் கல்லூரி ஆசிரியர்களை கௌரவித்தார். இந்த நிகழ்ச்சி ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இலக்கியச் செல்வன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் பெருந்துறை ஆண்ட முத்துசாமி, மொடக்குறிச்சி தெற்கு ஈஸ்வரமூர்த்தி, மொடக்குறிச்சி வடக்கு ரவி, ஊத்துக்குளி சர்வேஸ்வரன், பெருந்துறை பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் வேலுச்சாமி, மாவட்ட பொதுச் செயலாளர் குப்புராஜ் மற்றும் பெருந்துறை பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வம், கவுன்சிலர்கள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாம் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.