கோபிசெட்டிபாளையம் இரண்டாவது வார்டில் நியாய விலை கடையை கே ஏ செங்கோட்டையன் அவர்கள் திறந்து வைத்தார்.
October 01, 2022
0
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதி, இரண்டாவது வார்டில் நியாய விலை கடையை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இரண்டாவது வார்டு முன்னாள் கவுன்சிலர் சக்தி கணேஷ், நகர செயலாளர் கணேஷ், தகவல் தொழில்நுட்ப செயலாளர் முத்துராமன், மாணவர் அணி செயலாளர் அருள் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன் ஆகிய கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.