இதில் காவிரிக்கரை முருகன் கோவில் அருகில் படித்துறை சுமார் 44 லட்சம், ஆவாரங்காடு துவக்கப் பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி கட்டிடம், டிவிஎஸ் மேடு மாதபுரம் பகுதியில் சமுதாயக்கூடம், கண்டி புதூர் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் கழிவு நீர் வடிகால் வசதி, புதன் சந்தைப்பேட்டை நாட்டா கவுண்டன் புதூர் பகுதியில் நவீன கழிப்பிட வசதி, ஜீவா செட் பகுதியில் அங்கன்வாடி பள்ளிக்கு பாதுகாப்பு சுற்றுச் சுவர், ஆண்டிக்காடு வெடியரம்பாளையம் குறுக்கு ரோடு சிமெண்ட் சாலை வசதி ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பணிகளின் மொத்த மதிப்பீடு 100.8 லட்சம். மேலும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார். உடன் நகர கழகச் செயலாளர் பி எஸ் வெள்ளியங்கிரி, தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ் செந்தில், அம்மா பேரவை செயலாளர் டி கே சுப்பிரமணி, நகர துணை செயலாளர் ஜெய்கணேஷ், நகர பொருளாளர், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் வாசு மற்றும் நகர மன்ற கவுன்சிலர்களான செந்தில், சம்பூரணம், பெரியார் நகர் சரவணன், ஜெயா வைத்தி, சுரேஷ் என்கிற கோபாலகிருஷ்ணன், சுஜாதா மாரிமுத்து ஆகியோர் மற்றும் மாணவர் அணி தலைவர் ஆடிட்டர் ராஜா, தகவல் தொழில் நுட்ப பிரிவு சுரேஷ், சரவணன், ராஜ்குமார் மற்றும் ஆற்றல் மிகு வார்டு கழக செயலாளர்கள், பாசறை நண்பர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
✍️ நாமக்கல் மாவட்ட செய்தியாளர் சுந்தரம்.