ஏழை இரட்டை சகோதரர்களுக்கு கல்வி செலவுகள் அனைத்தும் டி என் பாளையம் ஒன்றிய திமுக ஏற்றுக்கொண்டது
October 29, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் டி என் பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டையம் பாளையம் அரசுப் பள்ளியில் பயின்ற ராகுல், கோகுல் என்ற ஏழை இரட்டை சகோதரர்களுக்கு கல்வி செலவுகள் அனைத்தும் டி என் பாளையம் ஒன்றிய திமுக ஏற்றுக்கொண்டு அவர்களின் வீட்டிற்கே சென்று நிதி மற்றும் பொருட்களை ஈரோடு வடக்கு மாவட்டம் செயலாளர் என். நல்லசிவம், டி என் பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் பாஸ்கரன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.