நந்தா கல்லூரியின் சார்பாக உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
October 29, 2022
0
நந்தா பிசியோதெரபி கல்லூரியின் நரம்பியல் துறை சார்பாக உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நந்தா சென்ட்ரல் ஸ்கூல் வரை நடைபெற்றது. நந்தா அறக்கட்டளையின் தலைவர் திரு. வி. சண்முகன் தலைமையில் நடைபெற்ற பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட கூடுதல் மேஜிஸ்திரேட் திருமதி. சந்தோஷினி சந்திரா சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் உலக பக்கவாத தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது என்றும் மரணத்திற்கான காரணிகளில் மாரடைப்புக்கு அடுத்து இரண்டாவது காரணியாக பக்கவாதம் திகழ்கிறது என்றும் பொதுவாக பக்கவாதம் என்பது வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படுவது வழக்கம் ஆனால் அண்மை காலத்தில் இளமையில் பக்கவாதம் ஏற்படும் விகிதம் உயர்ந்துள்ளது பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணிகளாக உயர் ரத்த அழுத்தம்,ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், புகை பிடித்தல், மது அருந்துதல், துரித உணவு பழக்கம் . உடற்பயிற்சியின்மை, உடல் பருமன் ஆகியவை திகழ்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நந்தா பிசியோதெரபி கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் மக்களுக்கு துண்டு பிரசுரங்களை அளித்தும் விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டும் பேரணியை மேற்கொண்டனர். மேலும் இந்த வருடம் பக்கவாதத்தில் முதல் அறிகுறி ஏற்பட்டவுடன் அதி விரைவாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தி "பொன்னான நேரம்" என்ற மேற்கோளில் உலக பக்கவாத தினம் அனுசரிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்தப் பேரணியில் நந்தா கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி திரு. ஆறுமுகம் அவர்களும், செயலாளர்கள் திரு. நந்தகுமார் பிரதீப் அவர்களும், திரு. திரு மூர்த்தி அவர்களும், முதன்மை நிர்வாக அலுவலர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களும், நந்தா பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர் திரு. மணிவண்ணன் அவர்களும், கல்லூரி பேராசிரியர்களும், நந்தா கல்வி நிறுவனங்களில் மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் T. பிரகாஷ் அவர்கள் மற்றும் பல மாணவர்களும் கலந்து கொண்டனர். இது தொடர்பாக கல்லூரி முதல்வர் திரு. மணிவண்ணன் கூறுகையில் - பக்கவாதத்தில் பிசியோதெரபி மருத்துவர்களின் பங்கு இன்றியமையாதது பக்கவாதத்தின் பின் விளைவுகளில் இருந்து விடுபட இயன்முறை மருத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது. நந்தா பிசியோதெரபி கல்லூரியின் புற நோயாளிகள் பிரிவில் பக்கவாதத்திற்கான சிகிச்சை நரம்பியல் துறை சிறப்பு பிசியோதெரபி மருத்துவர்களால் இலவசமாக அளிக்கப்படுகிறது. பக்கவாதம் ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு தகுந்தவாறு சிகிச்சை அளிக்கப்படுவதற்கு ஏதுவாக பிசியோதெரபி மருத்துவர்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தெரிவித்தார்.