நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக கழக செயலாளராக புதிதாக பொறுப்பேற்று இருக்கும் மதுரா செந்தில் மற்றும் பள்ளிபாளையம் திமுக ஒன்றிய கழக செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் வெப்படை செல்வராஜ் ஆகியோருக்கு பள்ளிபாளையம் ஒட்டமெத்தை ரவுண்டானா அருகில் நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகர மன்ற துணை தலைவர் பாலமுருகன், மற்றும் திமுக நகர கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, சால்வை அணிவித்து சிறப்பாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து புதன் சந்தை அருகில் உள்ள லட்சுமி மஹால் அருகில் பள்ளிபாளையம் திமுக நகர கழக செயலாளர் அ. குமார், நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன், பள்ளிபாளையம் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் குரு (எ) சசிகுமார், வினோத்குமார்,
யுவராஜ், அருள் சுதா வெண்ணிலா, சுந்தர் மங்கலம், கவிதா (பெரியசாமி), மகேஸ்வரி செல்வம் , சாந்தி (கோல்ட் பெல் தங்கமணி), நவீனா (பாலமுருகன்), நகர கழக நிர்வாகிகள், வார்டு கழகச் செயலாளர்கள், நகர இளைஞரணி நிர்வாகிகள்,
மகளிர் அணி நிர்வாகிகள்,
வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், நாமக்கல் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், பள்ளிபாளையம் ஒன்றிய நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சால்வை மற்றும் மாலை அணிவித்து வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
✍️ நாமக்கல் மாவட்ட செய்தியாளர் சுந்தரம்.