அந்தியூர் வேத பாறை அணை திட்டத்தை நிறைவேற்ற எம்எல்ஏ கோரிக்கை.
October 28, 2022
0
அந்தியூர் தொகுதியில் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான வேத பாறை அணைத்திட்டத்தை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம் கோரிக்கை விடுத்தார். முதலமைச்சர் அறிவுரைப்படி எம் எல் ஏ க்கள் தங்கள் தொகுதியின் 10 முக்கிய பிரச்சினை குறித்த அறிக்கை சமர்ப்பித்தனர். அது குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம் கூறியதாவது - முந்தைய ஆட்சியில் 36 எக்டேர் வேத பாறை நீர்த்தேக்க திட்டத்திற்கு வனத்துறைக்கு இரண்டு மடங்கு கூடுதலாக நிலம் கொடுக்கப்பட்டது, வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சம்மதம் பெறப்பட்டது, அரசாணை வெளியிடப்பட்டது ஆனால் அதற்காக சுமார் 1518 மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்ற நிலை தோன்றியது, இதை எதிர்த்து சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வந்தது ஆனால் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர். அப்போது ஃபாரஸ்ட் கன்சர்வேஷன் சட்டப்படி சான்று பெற வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது ஆனால் சான்று பெற முடியவில்லை எனவே கோர்ட் திட்டத்திற்கு தடை விதித்தது ஆனால் அதன் பிறகு அப்பகுதி புலிகள் சரணாலயம் என அறிவிக்கப்பட்டது. திட்டம் கிடைப்பில் போடப்பட்டுள்ளது மீண்டும் இத்திட்டத்தை மத்திய அரசுக்கு விளக்கி தடையில்லா சான்று பெற வேண்டும் இத்திட்டத்தை நிறைவேற்றினால் ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும். இதே போன்று பர்கூர், தோனி மடுவு, பவானி நதி மற்றும் மேட்டூர் உபரிநீரை அந்தியூர் தொகுதியில் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும். இதனால் பாசன வசதி பெருகும், நிலத்தடி நீர்மட்ட உயரும். அந்தியூர் ஒன்றியத்தில் அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் ஐந்து நகர பஞ்சாயத்துகளுக்கும் புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் வகுக்கப்பட்டு குடிநீர் பிரச்சினை போக்க வேண்டும். பர்கூர் மலைப்பகுதி மக்களுக்கு பட்டா மற்றும் மும்முனை மின்சாரம் தேவைை . அந்தியூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு அனைத்து வசதிகளும் ஏற்படுத்த வேண்டும். தற்போது பர்கூர் மலையில் விபத்துக்குள்ளாகும் மக்கள் ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். மலைப்பகுதி சாலைகளில் தடுப்புச் சுவர்கள் அமைக்க வேண்டும். தற்போது பெய்த மழையில் அந்தியூர் பகுதி தனித் தீவாக மாறியது எனவே அங்கு கெட்டி சமுத்திரம் பகுதியில் ஒரு மேம்பாலம், அம்மாபாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு மேம்பாலம் என 2 மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். ஆறு அரசு நடுநிலைப்பள்ளி உயர் நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும். சில பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் தேவை, பழுதடைந்த தொகுப்பு வீடுகள் அனைத்தையும் புதிதாக கட்டித் தர வேண்டும். கலெக்டர் கிருஷ்ணன்உன்னி மற்றும் அதிகாரிகள் கோரிக்கைகளின் மீது அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்படும். நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அந்தியூர் அரசு மருத்துவமனைத் தவிர அனைத்து தாலுகா மருத்துவமனைக்கும் தரம் உயர்த்த பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு விரைவில் ரத்தம் சேகரிக்க மையம், இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் நவீன கருவிகள் கிடைக்கும். வேத பாறை அணைத்திட்டத்தை குறித்து மீண்டும் அரசுக்கு பரிந்துரை அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.