புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் 05.11.2022 அன்று கலந்தாய்வு...
November 04, 2022
0
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், தமிழ்நாட்டில் சிறந்த புத்தொழில் சூழமைவினை உருவாக்க தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது StartupTN Brandlabs , StartupTN Launchpad என்ற இரண்டு முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருகிறது.StartupTN Brandlabs என்பது, புத்தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவில் ஆர்வமுடையோர், மாணவர்கள், வெற்றியடைந்த தொழில் ஆளுமைகள், தொழில்முனைவு வல்லுநர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் களமாகும். தமிழ் நாட்டில் பல புத்தொழில் நிறுவனங்கள் புதுமையான தயாரிப்புகளை உற்பத்தி செய்தாலும், சந்தைப்படுத்துதலிலும் வணிகச்சந்தையில் தனித்துவமான ஒரு இடத்தை அடைவதிலும் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்த சிக்கல்களுக்கான தீர்வுகளை காணும் களமாக இது அமையும். சந்தைப்படுத்துதல் (Marketing) மற்றும் தனித்த வணிக அடையாளத்துடன் விளங்குதல் (Branding) குறித்த கற்றல் நிகழ்வுகளும், அனுபவ பகிர்வுகளும் இவ்வரங்கில் நடைபெறும். இதன் ஒரு பகுதியாக StartupTN Launchpad நடைபெறும்.StartupTN Launchpad என்பது புத்தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வாக அமையும். மாதந்தோறும் நடைபெறும் நிகழ்வில், சிறந்த, புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வெளியிடும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களது நிறுவன தயாரிப்புகளை அறிமுகப்படுத்த அனுமதிக்கப்படுவர்.
மேலும், தொடர்ந்து சந்தைப்படுத்துதல், தனித்த வணிக அடையாளத்தை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான வழிமுறைகள் வழங்கப்படும். www.startuptn.in என்ற இணையதளத்தில், startupTN launchpad என்ற இணைப்பின் கீழ் இதற்கான விண்ணப்ப படிவம் இருக்கும் எதிர்வரும், 05.11.2022 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு வெள்ளாளர் பெண்கள் கல்லூரியில் உள்ள கலந்தாய்வு அரங்கில் (Conference hall ) 89 ஆண்டு வணிக அடையாளம் உள்ள (Brand) நம்பிசன் நெய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.விவேக் நம்பிசன் இந்நிகழ்வினை தொடங்கி வைக்கிறார். மேலும் ஈரோடு மண்டல இந்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் யங் இந்தியன் (CII Young Indians , Erode Chapter ) தலைவர் திரு.த.குமரவேல் , RGS FEEDS காமதேனு கால்நடை தீவனம் நிறுவன நிர்வாக இயக்குனர் திரு.ராமமூர்த்தி சுந்தரம் , Some More Foods நிர்வாக இயக்குனர் திருமதி. தீபா முத்துகுமாரசாமி மற்றும் Devas ஆர்கானிக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் திரு.மகாலிங்கம் ஆகியோர் தங்கள் நிறுவன வணிக அடையாளங்களை சந்தைக்கு கொண்டு வந்த அனுபவங்கள் பற்றி கலந்துரையாடுகின்றனர். மேலும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க மையத்தின் மாநில பிரதிநிதிகள் மற்றும் ஈரோடு மண்டல அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். கலந்துரையாடல் மற்றும் பங்கேற்பாளர்கள்-உரையாளர்கள் இடையேயான கேள்வி-பதில் நிகழ்வும் நடைபெறும்.
Tags