பா.ஜ.க. தெற்கு மாவட்ட தலைவராக வி.சி.வேதானந்தம் பதவியேற்கும் விழா இன்று ஈரோடு கமலாலயத்தில் நடைபெற்றது.
November 04, 2022
0
பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவராக வி.சி.வேதானந்தம் அவர்கள் பதவியேற்கும் விழா இன்று ஈரோடு பச்சப்பாளியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு புதிதாக பதவியேற்றுக்கொண்ட ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி.சி. வேதானந்தம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.