இதில் குழந்தைகள் விளையாடும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வசதிகளுடன் பணிகள் நிறைவுற்றதை தொடர்ந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தலைமையில் நடைபெற்றது,
இதில் வீட்டுவசதிதுறை அமைச்சர் சு.முத்துச்சாமி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தி பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்கள். தொடர்ந்து
கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட வேங்கையம்மையார் நகராட்சி துவக்கப்பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம், கோபிசெட்டிபாளையம் நகராட்சி மொடச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய பள்ளி கட்டிட திறப்பு விழாவிற்கான கல்வெட்டை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சு.முத்துச்சாமி அவர்கள் -
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதல்வர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுத்து வருகிறார். தண்ணீர் தேங்கும் இடத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியானது கடந்த ஒரு வருடமாகவே நடைபெற்று வருகிறது. மேலும் முதல்வர் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களையும் பார்வையிட்டுள்ளார். தற்பொழுது சென்னையில் பெய்து வரும் கடும் மழையிலும் தண்ணீர் தேங்காமல் உள்ளது. இதற்கு காரணமே தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் ஆகும். நம்முடைய மாவட்டத்தை பொறுத்தவரையில் காவிரி ஆற்றில் நீர் வரும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருமழி இசை என்ற இடத்தில் துணை நகர் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அங்கு ஒரு சிலர் இடங்களை ஒப்படைக்காமல் உள்ளனர். அவை கிடைத்த பிறகு துணை நகரம் அமைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். விளாங்கோம்பை வனப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்தேன். இது கவனிக்கத்தக்க விஷயமாகும். இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்காலிகமாக பள்ளிகளுக்கு செல்ல வசதிகளை திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோபியில் புறவழிச் சாலை அமைக்க செயல் திட்டம் உள்ளது .உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் கோபியில் உள்ள கீரிப்பள்ள ஓடை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விற்கப்படாத வீட்டுமனைகள் சலுகை விலையில் விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை. அபராத தொகை வட்டியை மட்டும் குறைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம், கோபிசெட்டிபாளையம் நகரச் செயலாளர் மற்றும் நகர் மன்ற தலைவருமான என். ஆர். நாகராஜ், கவுன்சிலர் P சரோஜா, டி என் பாளையம் ஒன்றிய செயலாளர் எம் சிவபாலன், முன்னாள் முன்னாள் சிட்கோ வாரியம் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், குமார சீனிவாஸ், கவுன்சிலர் மகேஸ்வரி திருவேங்கடம், கவுன்சிலர் விஜய கருப்புசாமி, நகர பொறியாளர் அணி பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.