கரூர் வைசியா வங்கி ரூ. 2,00,000/- மதிப்பீட்டில் புதிய பேட்டரியால் இயங்கும் வாகனத்தை கோபிசெட்டிபாளையம் நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு வழங்கினர்.
November 09, 2022
0
கோபிசெட்டிபாளையம் நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு கோபிசெட்டிபாளையம் கரூர் வைசியா வங்கி தனது சமுதாய பங்களிப்பு தொகையிலிருந்து ரூபாய் இரண்டு இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேட்டரியால் இயங்கும் திடக்கழி மேலாண்மை வாகனத்தை வழங்கினர். மின் நகர் பகுதியில் நடைபெற்ற விழாவில், நகர மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அவர்களிடம் வங்கியின் கோவை மண்டல மேலாளர் சீனிவாசன் அவர்கள் வாகனத்தின் சாவியை ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் கோபிசெட்டிபாளையம் கரூர் வைஸ்யா வங்கியின் மேலாளர் கார்த்திகேயன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன், வார்டு செயலாளர் செந்தில்குமார், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை பாரத திட்ட பரப்பரையாளர்கள், மின் நகர் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் கருப்பண்ணசாமி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். வங்கி அதிகாரிகளுக்கு, நகர் மன்ற தலைவர் நகராட்சியின் சார்பில் நன்றிகளை தெரிவித்தார்.