நந்தா பொறியியல் கல்லூரியில் 22 வது முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா இனிதே நடைபெற்றது. இவ்விழாவினை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர் திருமதி. பானுமதி சண்முகன் அவர்கள் கலந்துக் கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் மாணவர்களின் தனித்திறன்களை ஊக்கப்படுத்தும் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ஸ்ரீமதி. பாரதி பாஸ்கர் சிறப்பு விருந்தினராகவும், ஈரோடு நவரசம் கலை, அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் ஐ. செல்வம் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துக் கொண்டார்கள்.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு.வி.சண்முகன் அவர்கள் தலைமையேற்று உரையாற்றுகையில், ஒரு மாணவன் பள்ளி படிப்பினை முடித்து கல்லூரியில் சேருவது என்பது அவனது வாழ்க்கையில் முக்கிய தருணமாகும். ஏனெனில், பயிலவிருக்கின்ற நான்கு வருடங்களுக்கு பிறகு என்ன ஆகவேண்டும் என்ற நோக்கத்தினை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை நோக்கி மாணவர்களுடைய செயல்பாடு அமையுமேனால் வெற்றி அவர்களுக்காக காத்திருக்கும் என்றார்.
மேலும், ஒரு சிறந்த பொறியாளனாக உருவெடுப்பதற்கு தொடர்பியல் திறன், பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு, புதிய படைப்பாற்றல் மற்றும் தலைமையாற்றுதல் போன்ற நான்கு முக்கிய பண்புகள் மிகவும் அவசியமாகும். நீங்கள் இத்தகைய பண்புகளில் தன்னை அர்பணித்துக் கொண்டு சிறந்த பொறியாளனாக அடையாளம் கண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைந்திட எனது வாழ்த்துக்கள் என்றும் கூறினார்.
இவ்விழாவில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் திரு. எஸ். நந்தகுமார் பிரதீப் மற்றும் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திரு. எஸ். திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி முனைவர் திரு.எஸ்.ஆறுமுகம், நந்தா தொழில் நுட்ப வளாகத்தின் இயக்குனர் செந்தில் ஜெயவேல் மற்றும் நிர்வாக அலுவலர் திரு. ஏ.கே. வேலுசாமி ஆகியோர் கலந்து கொண்டு முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று வாழ்த்திப் பேசினர். முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் திரு என். ரெங்கராஜன் அவர்கள் முதலாமாண்டு பயிலயிருக்கும் மாணவர்களையும், அவர்தம் பேசினார். பெற்றோர்களையும் வரவேற்று
பின்னர் கௌரவ விருந்தினரான பேராசிரியர் ஐ. செல்வம் பேசுகையில், தனது கல்லூரி படிப்பு துவங்கிய முதலாமாண்டு முதல், பயின்று வெளியேறும் வரை பெற்ற அனுபவங்களை மாணவர்களுடன் பகீர்ந்து கொண்டு உற்சாகப்படுத்தினார். மேலும், செல்பி எடுப்பதில் நேரங்கள் விரையமாவதினை தடுத்து, நீங்கள் தேர்ந்தெடுத்த பாடங்களிலும், பொது அறிவிலும் நேரத்தினை விரயம் செய்வீர்களானால், நாளை தங்களுடன் செல்பி எடுப்பதற்கு பட்டாளமே திரளும் அளவிற்கு சிறந்த பொறியாளனாக உருவெடுப்பீர்கள். அதற்கு இன்றே உறுதி மொழியினை எடுத்துக் கொள்ளவேண்டும் என வலியுறுத்தி தனது வாழ்த்தினைமாணவர்களுக்கு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ஸ்ரீமதி. புாரதி பாஸ்கர் அவர்கள் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், முதலாமாண்டில் அடியெடுத்து வைக்கும் நீங்கள் முதலில் ஒரு குறிக்கோளினை வரையறுக்க வேண்டும். பின்னர், அதனை நோக்கிய கல்வியுடன் கூடிய பயணயத்தினை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு குறிக்கோள் இல்லாது பயணிப்பவர்கள் தங்களது பொற்றோர்களுக்கு துரோகம் செய்ததாக கருதப்படுவீர்கள் என்று மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
மேலும், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் கிடைபெறும் நண்பர்களை மலைபோல் நம்பாது நம்மை சுற்றியுள்ள நண்பர்களை தேர்ந்தெடுத்து ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழ்வில் முன்னேற்றமடைய என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறி மாணவர்களை வாழ்த்தினார்.