இந்த பயிற்சிக்கு அம்மாபேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் கனிமொழி தலைமை தாங்கி வேளாண்துறை மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார். விதை அங்கக சான்று அலுவலர் தமிழரசு இயற்கை விவசாயம் குறித்து விளக்கினார். தோட்டக்கலை உதவி அலுவலர் மேனகா தோட்டக்கலை துறை மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார். வேளாண்மை உதவி அலுவலர் முனியப்பன் நெற்பயிரில் பூச்சி கட்டுப்பாடு குறித்து விளக்கினார். வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை வேளாண்மை உதவி அலுவலர் சுவாதி, கீர்த்தி வர்மன் மதிப்பு கூட்டல் பயிற்சி அளித்தனர். வட்டார மேலாளர் பிரபாகரன் உழவன் செயலி பயன்பாடு மற்றும் பதிவு செய்யும் முறைகள் பற்றி செயல்விளக்கம் செய்து காட்டினார். உதவி மேலாளர் தியாகராஜன் மண் பரிசோதனை முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
குறிச்சி கிராமத்தில் 40 மேற்பட்ட விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் மற்றும் பழ பயிர்களில் மதிப்பு கூட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது.
November 08, 2022
0
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டாரம் குறிச்சி கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டத்தில் 40 மேற்பட்ட விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் மற்றும் பழ பயிர்களில் மதிப்பு கூட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது.
Tags